Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மது பழக்கத்தால் ஏற்பட்ட வலி… தந்தையை இழந்து தவிக்கும் குழந்தை… தீராத சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுப்பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்றுவலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் எருமபாட்டியை அடுத்துள்ள காவக்காரன்பட்டியில் மணிகண்டன்(30) என்பவர் அவரது மனைவி கவுசல்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கவுசல்யா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் சமீப காலமாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியானதாக நிலையில் விரக்தியடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் அவர் குழந்தையை பார்ப்பதற்க்கு மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் வாயில் நுரை தள்ளியபடி இருந்த கணவரை பார்த்த கவுசல்யா அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினம் கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த எருமபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |