ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வீரக்குடி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.முக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நரிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.