உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தனது மகளுக்கு ‘கொரோனா’ என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார். அன்றைய தினத்தில், அந்த குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையின் மாமா கொரோனா என பெயர் சூட்ட முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. இது உலகில் பல மக்களை கொன்றுள்ளது. ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு உலகை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது, இந்த குழந்தை தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்” என கூறினார்