அருவருப்பாக இருக்கிறான் என்று பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் தற்போது படிப்பில் சிறந்து விளங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
நைஜீரியாவில் 3 வயது சிறுவன் ஒருவன் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்ததால் அவருடைய பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளார். இந்நிலையில் அனாதையாக தெருவில் நிற்கும் அந்த சிறுவன் பெண் ஒருவரிடம் தண்ணீர் அருந்தும் காட்சி 5 ஆண்டுகளுக்கு முன் பதிவாகி இருந்தது. இந்த சிறுவனை அப்போது நைஜீரியா தெருவில் இருந்து காப்பாற்றியவர் டென்மார்க்கை சேர்ந்த Anja என்ற பெண்மணி ஆவார். இந்நிலையி அவர் சிறுவனின் பெயரை ஹோப் என்றும் மாற்றியுள்ளார்.
இது குறித்து தற்போது anja கூறுகையில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு அந்த சிறுவனை மீட்ட போது மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மட்டுமல்லாமல், பல நோய்களும் இருந்தது. சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த முதல் இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தான கட்டத்திலேயே இருந்தார். பிழைப்பானா? மாட்டானா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த மோசமான தருணங்கள் அனைத்தும் தாண்டி தற்போது ஏழு வயதில் துடிப்பான சிறுவனாக மாறியுள்ளார்” என்று கூறியிருக்கிறார்.
ஹோப் மட்டுமல்லாமல் இவரைப்போன்று அனாதையாக விடப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்களை இந்த பெண்மணியின் தொண்டு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது ஹோப் 7 வயது சிறுவனாக கல்வியிலும், ஓவியம் வரைதல் சிறந்து விளங்குவதாகவும், மனிதனுடைய வாழ்க்கையை மாற்றிய அந்த அரிய புகைப்படத்தை ஒரு புன்னகையுடன் சிறுவன் பார்ப்பான் என்றும் anja தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை சிறுவனின் பெற்றோரோ அல்லது குடும்பத்தினரையோ கண்டுபிடிக்க முடியவில்லா என்றும் தெரிவித்துள்ளார்.