அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கட்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் கேஸ் மற்றும் பெட்ரோலின் விலையின் அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித கட்சிகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தமிழன் தலைமை தாங்கியுள்ளார்.
அதன்பின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்டாரத் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்துயுள்ளார். இதனை அடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர்.