Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் டெஸ்ட் மட்டும் சிறந்தது; ரேபிட் டெஸ்ட் வேண்டாம் – ஐ.சி.எம்.ஆர்!

கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சோதனை துல்லியமாக இல்லை எனவும், இந்த கருவியின் தரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை எனவும் தகவல் வெளியானது. முதலில் ராஜஸ்தான் அரசு, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் புகார் அளித்தனர்.

5.4 சதவீதம் அளவுக்கே துல்லியமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடமும் மாநில அரசுகள் புகார் அளித்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டது. ரேபிட் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் நிறைய மாறுபாடுகள் வருவதால் ஐசிஎம்ஆர் குழுவினர் ரேபிட் கருவிகள் மீது ஆய்வு நடத்திய உரிய அறிவுரைகள் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் தகவல் அளித்துள்ளது. சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் கண்டறிதல் கருவிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. சீன நிறுவனங்களிடமிருந்து இந்தியா 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |