ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது.
இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.