Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….. தும்பிய பின்….. 5 நாள்….. உயிருடன் உலா வரும் கொரோனா…..!!

கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பொருளின் மீது எத்தனை காலம் வரை உயிர் வாழும் என்பது குறித்த ஒரு குறுந்தகவலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்து நாள்தோறும் ஆராய்ச்சியாளர்கள் புதிய புதிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், அது எப்படி பரவுகிறது, அதனிடமிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்பது குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகளும் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில்,

தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பொதுவாக வைரஸ் மனிதன் தும்பும் போது  காற்று, நீர் வெளியேறி அங்கே கிடைக்கும் பொருட்கள் மீது பட்டு அந்த பொருட்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட காலம் வரை உயிர்வாழும். அப்போது மனிதர்கள் அதனை தொடும் சமயத்தில் அவர்களிடம் சற்றென்று அந்த வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

இரும்பு பொருட்களில் இந்த வைரஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், இரண்டு நாட்களும், மரம், கண்ணாடி உள்ளிட்ட பொருட்களில் நான்கு நாட்களும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் ஐந்து நாட்கள் வரையிலும் வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |