நான் முஸ்லிம் என் மனைவி ஹிந்து என் பிள்ளைகள் இந்தியர்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
மும்பையில் தொலைக்காட்சி டான்ஸ் 5 பிளஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். அப்போது பேசிய அவர், எப்போதுமே தனது வீட்டில் இந்து முஸ்லீம் பிரச்சனை பற்றி பேசியதே இல்லை.
ஏனென்றால் தனது மனைவி ஹிந்து நான் முஸ்லிம் தனது குழந்தைகள் இந்தியர்கள் என்று கூறிய அவர், தனது மகள் ஒரு முறை பள்ளி படிவங்களில் மதம் குறித்து கேட்ட போது நாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் இல்லை நாம் அனைவரும் இந்தியர்கள் என எளிமையாக அந்த படிவத்தில் எழுதியதாக ஷாருக்கான் குறிப்பிட்டார்.