கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில்.. இந்தக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென்று பூஜை செய்யும் சமயத்தில் அம்மன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(வயது 32) மற்றும் தேன்கனிக்கோட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த செல்வா(வயது 27) என்பதும் தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் எடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீஎல்லம்மா தேவி கோயில் சாமிக்கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது குறிப்பிடத்தக்கது.