Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்கள் 100% நீதி…… அரசு 100% அநீதி…… சென்னை கருத்தரங்கில் அதிரடி பேச்சு…!!

சென்னையில் கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் காஷ்மீர் 370 கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசினார். அதில்,காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால், அதை செய்தவர்கள் அங்கிருந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். ஈழத்தில் மக்கள் சாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அமைப்புகள் என்று குறிப்பிடாமல் இஸ்லாமியர்கள் தான் பண்டிதர்களைக் கொன்றார்கள் என்று கூறுகிறார்கள்.

Image result for article 370

இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ஒப்பந்தத்தில் அந்த பகுதியைப் பாதுகாக்கும் பணி மத்திய அரசுடையது என்று தான் உள்ளது. அதனடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அதிகளவில் அங்கு எப்போதுமே பணியிலிருக்கின்றனர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் 10 மக்களுக்கு ஒரு வீரர் என்று நியமித்து கண்காணித்து வருகின்றனர். இப்படியிருக்கும் பட்சத்தில் 370 பிரிவை நீக்கி தான் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்கிற அவசியம் மத்திய அரசுக்கு இல்லை.

Related image

அதுமட்டுமின்றி பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம் என்று கூறும் மத்திய அரசு, அதே பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த தான் 370 பிரிவை ரத்து செய்துள்ளோம் என்று கூறுகிறது.உள்ளூர் மக்கள் அந்நியப்பட்டிருக்கும் நிலைதான் முதன்மையானதாக இருக்கிறது. எனவேதான் திரும்ப திரும்ப சொல்கிறேன் காஷ்மீர் மக்களின் கோரிக்கை 100 சதவிகிதம் நியாயமானது. அவர்களை எதிர்க்கும் இந்திய அரசின் செயல் 100 சதிவிகிதம் அநீதியானது. இதை அவர்கள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளதான் போகிறார்கள்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |