கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார்.
நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , அதிமுக உள்ளிட்ட தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
கமலின் இந்த பேச்சுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருநாள் கமலின் நாயகிக்கு அறுக்கப்படுமென்று கடுமையாக விமர்சித்தார்.இதற்க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜீ கூறுகையில் , அரசியலுக்கு வந்ததில் இருந்தே கமல்ஹாசன் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒரு நல்ல கலைஞன் ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு கலைத்துறையில் மீண்டும் ஈடுபடலாம் என்று விமர்சனம் செய்துள்ளார்.