அமெரிக்காவில் இளம் பெண்ணின் குழந்தையை வேறு ஒருவர் ட்ராலியுடன் தள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையுடன் கடைக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தான் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்திவிட்டு திரும்பியபோது அவரது குழந்தை இருந்த ட்ராலியை வேறு ஒருவர் தள்ளி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அந்த நபர் வெளியே செல்வதற்குள் ஓடிச்சென்று அவரிடமிருந்து ட்ராலியை வாங்கி குழந்தையை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நபர் குழந்தை இருக்கும் ட்ராலியை தள்ளிக்கொண்டு எஸ்கேப் ஆகும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தையை கடத்திய நபர் தான் வாங்கிய பொருட்களுக்கு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் அதனை வைத்து காவல்துறையினர் அவரது முகவரியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்கையில் அவர் அரிசோனாவை சேர்ந்த சமையல் கலைஞரான ஜெப்ரி ரோஹோல்ட் என்பதும் தனது ட்ராலி என நினைத்து தவறுதலாக குழந்தை இருந்த ட்ராலியை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் மீது குழந்தையை கடத்திய வழக்கு காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.