இரண்டு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம் என்பவர். இவர் ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடும் வண்டியை சொந்தமாக வைத்துள்ளார். அதனால் வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு வீட்டில் தங்க முடியாது என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அதன்படி பணிக்காக சென்று வந்துள்ளார். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
இதனால் பரசுராமன் நடத்தையில் சந்தேகம் பட்ட மனைவி அவரை பின் தொடர்ந்து சென்று உள்ளார். அப்போது பரசுராம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை கண்டதும் கணவருடன் இருந்த அந்தப் பெண்ணை அடிப்பதற்காக சென்றுவிட்டார். ஆனால் அப்பெண் பரசுராமுக்கு முன்பே திருமணம் நடந்ததே தெரியாது என்று அழுது கதறினார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் பரசுராமை கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பரசுராமை கைது செய்தனர்