தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக காவல்துறையினர் 6 பேர் மெது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் ரஞ்சித்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சித்ற்கும் அவரது பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பிரபு என்பவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் ரஞ்சித்க்கும் பிரபுவிற்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்த பிரபு மனைவி சிவரஞ்சனி மற்றும் உறவினர்களான விக்னேஷ், கவின், நாகராஜ், பாண்டியன் ஆகியோர் இணைந்து ரஞ்சித்தை தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்தவர்கள் இவர்களது சண்டையை விலக்கி விட்டு சமாதானப்படுத்தியுள்ளனர். இதற்கு பின்னர் வீட்டிற்கு சென்று துங்கியுள்ளார். இதனையடுத்து நேற்று வெங்கடேஷ்வரி ரஞ்சித்தை எழுப்பியுள்ளார். அப்போது ரஞ்சித் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ்வரி மற்றும் ரஞ்சித் தந்தை உடனடியாக காவல்நிலையத்தில் பிரபு மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதால் என் மகன் உயிரிழந்துவிட்டதாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிரபு மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பாண்டியன் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.