ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதல் பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் வடக்கு தெருவை சேர்ந்த அங்கு ராஜா(52) என்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளையும், ஏற்கனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்த பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.