கேரள மாநிலத்தில் கடுமையான கண் வலி காரணமாக மருத்துமனைக்கு சென்ற நபருக்கு புற்றுநோய் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிர்ந்து போயினர்.
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 65 வயது நபர் ஒருவர் சுமார் 3 மாதங்களாக கண் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அவர் கண்ணில் வலி அதிகமாக ஏற்பட்டு பெரும் துன்பம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் பல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் புற்றுநோய் பாதித்து உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உயிர் போகும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சில மருத்துவர்கள் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். இந்த நிலையில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் முன்னெடுக்கப்படும் கண் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்குள்ள பெண் மருத்துவர் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சைசெய்துள்ளார் . சில மணி நேரம் நீடித்த அந்த அறுவை சிகிச்சையில் 67 வயது நபரின் கண்ணில் இருந்து சுமார் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட மரத்துண்டு ஒன்று அப்புறப்படுத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இவர் கால் தவறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது மரக்கிளையில் உள்ள ஒரு மரத்துண்டு இவரது கண்ணுக்குள் சென்றுள்ளது. இவர் அறியவில்லை என கூறப்படுகிறது.
தற்போது சிகிச்சை பெற்று வந்த நபரின் பார்வைக்கு எந்த கோளாறும் இல்லை எனவும் குணமாக சில நாட்கள் ஆகும் என Chief டாக்டர் தெரிவித்துள்ளார்.