நபர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பின் தனது பிள்ளைகளை பார்க்க சென்றபோது அத்தை அவமானப்படுத்தியதால் மாயமாகியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிப்பவர் ரஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினிகுமாரின் மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு, கடந்த 4 ஆம் தேதி ரஜினிகுமார் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்ப்பதற்காக மனைவியின் வீட்டுக்கு ஆசையாக சென்றுள்ளார். ஆனால் அப்போது அவருடைய மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து ரஜினியின் சொத்துக்களை மனைவி பெயரில் எழுத கட்டாயப்படுத்தியுள்ளனர். பின்னர் செருப்பால் அடித்து தாக்கியுள்ளனர். மனமுடைந்த ரஜினிகுமார் வீட்டிற்கு வந்து கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.
அந்த கடிதத்தில், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்றபோது மனைவி, மைத்துனர் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து மனைவியின் பெயரில் என்னுடைய சொத்துக்களை எழுதி வைக்க சொன்னார்கள். பின்னர் என்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார்கள். இந்த சொத்துக்கள் அனைத்துமே என் அப்பாவிற்கு தான் உரிமை உள்ளது” என்று எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.