அமெரிக்காவில் மில்லியன் டாலர்களை லாட்டரியில் பரிசாக பெற்றவர் திடீரென நதியில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வந்த Leory N. Fick ( 69 ) எனும் முதியவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் லாட்டரியில் பல மில்லியன்களை பரிசாக பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக மன வேதனையில் இருந்து வந்த அவர் திடீரென திட்டபவஸீ எனும் நதியில் பிணமாக மிதந்துள்ளார். ஆனால் அவருடைய மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. எனவே காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் Leory N. Fick லாட்டரியில் பரிசாக பெற்ற 2 மில்லியன் டாலர்களை இரண்டு வருடங்களில் செலவழித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே 45 நாட்கள் அவர் போதை மருந்து தொடர்பான வழக்கில் சிறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் Leory N. Fick தான் பொதுமக்களுக்கு அதிக அளவில் பண உதவி செய்துள்ளதாகவும், அதனை அவர்கள் சிறிதும் நினைத்து பார்க்கவில்லை என்று ஒருமுறை தெரிவித்துள்ளார்.