பண்ணை உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தோட்டத்திலுள்ள பழவேற்காடு பெரிய தெருவை சேர்ந்த மகிமை ராஜ் என்பவர் இறால் பண்ணை வைத்து வெளிநாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற மாதம் 30-ம் தேதி இரவு நேரத்தில் இவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்று விட்டார்கள். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எரிந்து கொண்டிருந்தது.
இதன்பின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் மர்ம நபர்கள் அவ்வழியாகச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் கார்த்திக், 15 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் மகிமை ராஜுக்கும் கார்த்திக்கும் இடையே முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றார்கள்.