நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இப்படம் குறித்து படக்குழுவினர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை 10 முறை பார்த்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜயின் புகைப்படங்கள் எத்தனையோ இணையதளத்தில் வைரலாக பரவியுள்ளது. ரசிகர்களும் அதனை பகிர்ந்து மகிழ்வதை பலரும் பார்த்திருப்போம். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.