Categories
சினிமா தமிழ் சினிமா

இதுதான் ‘தம்பி’ குடும்பம்… புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு..!!

‘தம்பி’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் உலா வருகிறது.

‘கைதி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படமான ‘தம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டரை சூர்யா வெளியிட்டிருந்தார். அதே போல் படத்தின் டீஸரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

thambi
வயாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் ‘பேரலல் மைண்ட்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், ஆன்சன் பால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
thambi
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகில் விமலா, சீதா, சவுகார் ஜானகி ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தற்போது படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |