விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி பிகில் படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர் விஜய், டேனியல் பாலாஜி, யோகி பாபு, பரியேரும் பெருமாள் கதிர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
Bigil – Official Trailer | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | A… https://t.co/URoDbBDmc5 via @YouTube
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) October 12, 2019