மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன். இவர்கள் மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதேபோல் கோடி படத்தில் தனுஷ் ஜோடியாக அனுபமா நடித்துள்ளார், ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை.
தெலுங்கில் 4 படங்கள் நடித்துள்ளார், ஆனால் அந்த படங்களும் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் விரக்தியாக இருக்கிறார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சோகமாக்கியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அனுபமாவிடம் உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால் தான் படவாய்ப்புகள் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து அனுபமா ஜிம்மிற்கு போக ஆரம்பித்தார். தினமும் 6 மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். ஆனால் ஒரு சில ரசிகர்கள் குண்டாக இருந்தால் தான் அழகாக இருக்கிறீர்கள் என்றும் உடல் எடையை குறைத்தால் அழகாக இருக்கமாட்டிர்கள் என்றும் கூறிவருகின்றனர்.