திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ள பறையன்குளத்தில் தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள கிணற்றில் குளிப்பதற்காக அப்பகுதி இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள் தோட்டை சுற்றிப்பார்த்து கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த தோட்டத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுள்ளனர்.