Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஈமச்சடங்கு நடத்தும் இடம்… தனிநபர் ஆக்கிரமிப்பால் பரபரப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த காவல்துறையினர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாறில் உள்ள ஆற்றின் கரையோரம் ஒரு பொது இடம் உள்ளது. இந்து அப்பகுதியில் உள்ள மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்காரியம் போன்றவை செய்வது வழக்கம். இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அதை சுற்றிலும் கம்பி வெளி அமைத்துள்ளார். இதனையடுத்து ஓலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரின் குடும்பத்தினர் ஈமச்சங்கு செய்வதற்காக அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால் அங்கு கம்பி வேலி அமைக்கப்பட்டு சொல்லமுடியாத நிலையில் இருப்பதாய் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன், பால்பட்டி வருவாய் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் வருவாய் துறையினர் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். மேலும் அங்கு வழக்கம் போல ஈமச்சடங்குகள் நடத்த அனுமதி வழங்கியதோடு அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்பகுதியை யாரும் ஆக்கிரமிப்பு செய்யமுடியாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |