கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கெவின் ஓ பிரையன் என்ற லின்ஸ்டர் அணியின் வீரர் 37 பந்துகளில் 8 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவரது டொயாட்டோ காரின் மீதே விழுந்தது. இதனால் காரின் பின் பகுதியின் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து தூளானது.
ஆட்டம் முடிந்து தன் காரை பார்த்தபோது, காரின் பின் பகுதி கண்ணாடி முழுவதுமாக உடைந்து இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதன்பின் கண்ணாடி உடைந்த காரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு பொறுமையுடன் போஸ் கொடுத்து, அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.