களக்காடு அருகே ஆற்று பாலம் இல்லாததால் சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மூங்கிலடியை சேர்ந்த பட்டியலின மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூங்கிலடி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துவருகின்றனர்.இந்த இடுகாட்டிற்கு செல்ல மூங்கிலடி ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் ஆற்றில் பாலம் இல்லாததால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர் .
மேலும்,மலைக்காலங்களில் அதிக அளவில் வெள்ளம் வரும்போது கயிறுகட்டி தண்ணீர்க்குள் இறங்கி ஆபத்தான முறையில் சடலங்களை சுமந்து செல்லவேண்டி உள்ளதாக அவர்கள் வேதனைதெரிவிகின்றனர்.