Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் நிலைகுலைவு…. பாஜக ஆட்சியாளர்கள் தேசத்துரோகிகள் – சீமான் காட்டம்…!!

விவசாயிகளை நிலைகுலைய செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள் உண்மையான தேசத்துரோகிகள் என்று சீமான் காட்டம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகளும் வெகுண்டெழுந்துள்ளனர்.

விவசாயிகளின் பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவருவது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். சொந்த நாட்டின் குடிகளை துளியும் மதிக்காத போக்கின் மூலம் நாட்டை தலை குனியச் செய்து விவசாயிகளை நிலைகுலைய செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள் தான் உண்மையான தேச துரோகிகள் என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |