மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்…. நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப் குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும், இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா கும்பல்கள் எடுத்து வைக்கிறான். நாளை திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், பெரியாரிய கருப்பு சட்டை தோழர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், உயிரையேனும் கொடுத்து காப்பவனாக இருக்கக்கூடிய சக்திகள் என் இஸ்லாமிய சக்திகளும், கிறிஸ்தவ உறவுகளும் என்பதை தமிழக அரசே புரிந்துகொள்.
இன்னைக்கு சட்டமன்றத்திலே உங்களுக்கு ஒன்னுநா கூட இங்கே அமர்ந்திருக்கின்ற பேராசிரியர் குரலும், பாலாஜியின் குரலும், வேல்முருகனின் குரலும், கம்யூனிஸ்டுகளின் குரலும் தான் உங்களை காப்பதாக இருக்கிறது. இன்று உணர்ச்சிவசப்பட்டு உங்கள் அமைச்சர்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், கருத்துக்களுக்கு கூட சரியான தெளிவான பதிலடியை கொடுத்து, உங்களை காப்பறனாக இருக்கக்கூடிய எங்களுடைய தோழமை சக்திகள்…
இந்த சங்பரிவாரக் கும்பல்களின் அடாவடி, அட்டூழிய அரசியலில் இருந்து, உங்கள் சட்டத்தின் துணை கொண்டு, இவர்களை அடக்கி ஒடுக்கி வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், தமிழக முதலமைச்சர் அவர்களே உங்கள் கைகளில் இருக்கிறது. உங்கள் கைகளில் இருக்கிற காவல்துறைக்கு இருக்கிறது என்பதை நினைவு கூர்ந்து, அதற்கான உத்தரவுகளை நீங்கள் பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இதே சங்பரிவாரங்களின் அட்டூழியங்களும், அட்டூழியங்களும் பாரதிய ஜனதா கட்சியின் நாகரீகமற்ற நடவடிக்கைகளும், பேச்சுக்களும் தொடரும் என்று சொன்னால்… அமைதி வழியில் கூடியிருக்கின்ற இந்த கூட்டம் ஒருமுறை மாற்று கருத்தோடு சிந்தித்தால் தமிழகம் தாங்காது, தமிழகம் தாங்காது எச்சரிக்கை என கூறினார்.