திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி , மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். ஓராண்டுக்கு முன்பு தான் அவரது மகளுக்கு திருமணம் நடைபெற்று தற்போது மகள் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 7_ஆம் தேதி இரவு வனபெருமாள் பணிக்கு சென்றுவிட்டு 8-ஆம் தேதி காலை வீடு திரும்பிய போது அவரின் மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜ் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.மேலும் வீட்டிலிருந்த 21 சவரன் தங்க நகை கொள்ளை போயிருந்தது. இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சத்யராஜின் மகன் வெங்கடேசன் (எ) கண்ணதாசன் கடன் தொல்லை காரணமாக, வீரலட்சுமி மற்றும் போத்திராஜ் இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 21 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளி வெங்கடேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் , கொள்ளையடி_ க்கப்பட்ட நகைகளை விற்பனை செய்து தர உதவியதாக திருத்தணி அடுத்துள்ள பொன்பாடி, மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் உமாபதி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டம் கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் ஆகிய இருவரையும் பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.