Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி… வேறொரு பெண்ணை மணக்க முயன்ற காதலன்… மண்டபத்தில் மடக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய  சிறுமிக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உதயகுமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு லவ்வாக  மாறியது. தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் மிகவும் நெருங்கி பழகி தனிமையில் இருந்துள்ளார்..

இதனால் கர்ப்பமடைந்த சிறுமி உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி  உதயகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் உதயகுமார் திருமணம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்தது மட்டுமில்லாமல் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், இன்று உதயகுமாருக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக  இருந்தது. இதனை தெரிந்து கொண்ட சிறுமி, இது குறித்து மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், “தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்”  புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில், நிலக்கோட்டை சென்ற மகளிர் போலீசார் விரைந்து சென்று திருமண மண்டபத்திலேயே திருமணத்தை நிறுத்தி மணமகன் உதயகுமாரை மடக்கி விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையிலடைத்தனர்.

காதலியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த மணமகன் சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |