Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் பரிசோதகருக்கு பிளேடால் வெட்டு….. இரண்டு தமிழர்கள் கைது…!!

திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக  இருவரை  போலீசார் கைது செய்தனர்.

திருப்பதி – சென்னை நோக்கி  பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட  இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர்  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை  கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த  இருவரும் தங்களிடமுள்ள பிளேடால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் படி   இருவரையும் ஆந்திர போலீசார்  கைது செய்தனர்.

Categories

Tech |