அருப்புக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒன்றுகூடிய பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. ஊரடங்கை மீறிய வெளியே வருபவர்களுக்கு தண்டனை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒன்றுகூடிய மக்களை கையுறை முக கவசம் அணிந்து வர வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தி போலீசார் விரட்டியடித்தனர்.