ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பொது கஞ்சா வைத்திருந்த 2 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சட்ட விரோத செயல்களை தடுக்க ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரை கண்டதும் சிலர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பையை எடுத்து சோதனை செய்தபோது அதில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கஞ்சா வைத்திருந்தது கீழச்செல்வனூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(20) மற்றும் எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த மண்டை அருண் என்பது தெரியவந்துள்ளது. இதில் கருப்பசாமியை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய அருணை தேடி வருகின்றனர்.