Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோலத்தில் NO TO NRC, NO TO CAA…. எதிர்ப்பை காட்டிய 5 பேர் கைது… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்ற போலீசார் பின்னர் விடுதலை செய்தனர் 

சமீபத்தில் பாஜகவின் மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவை  அமல்படுத்தியது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சட்டத்தைத் திரும்ப பெறவேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள், எதிர்க்கட்சிகள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Image

இந்தநிலையில் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது வீட்டின் முன்பு சாலையோரம் ரங்கோலி கோலத்தில் Against CAA, Against NPR, NO TO NRC, NO TO CAA என எழுதி  போராட்டத்தில் ஈடுபட்டனர். கலர் பொடி ஓன்று தான் கோலத்தில் இல்லை.

Image

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் 4 பெண்கள் என   5 பேரை தடுத்து நிறுத்திய காவல்துறை, அவர்களை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/GirishNaught/status/1211148250473848832

Categories

Tech |