Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணத்தை மீறிய உறவு… மனைவியை கண்டித்த கணவன்… ஊற்றிக்கொடுத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலன்..!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்தவருடன் சேர்ந்து கணவரை  மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள விளாச்சேரி மொட்ட மலையை சேர்ந்தவர் கருப்பையா.. இவருக்கு 42 வயதாகிறது..  கருப்பையாவுக்கு 32 வயதில் பொன்னம்மாள் என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். வளையல் வியாபாரம் செய்துவரும் கருப்பையா நேற்றிரவு வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் இவரது மனைவி பொன்னம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது கணவன் இறந்துகிடப்பதாக ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.. இந்த விசாரணையில் பொன்னம்மாளுக்கும் திருமங்கலம் அருகேயுள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆறுமுகத்தின் அக்கா வீடு, கருப்பையா வீட்டின் அருகே இருக்கிறது.. அதனால் கருப்பையாவும், ஆறுமுகமும் நட்பாக பழகியுள்ளனர்.. அதேபோல பொன்னம்மாளும் ஆறுமுகமும் சந்தித்து பழகி  இருவரும் அடிக்கடி திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் கணவருக்கு தெரிந்ததும், அவர் பொன்னம்மாளை இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் அதனை விட்டுவிடும்படி கூறி கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு ஆறுமுகம் மற்றும் கருப்பையா இருவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். அப்போது கருப்பையாவுக்கு போதை தலைக்கேற ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக மனைவி பொன்னம்மாளும் இருந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |