போலீஸ் அதிகாரி ஒருவர் தாயிடம் சொத்தை வாங்கிவிட்டு வெளியில் அவரை அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
IRBN போலீஸ் அதிகாரி பதவியில் இருந்து வந்த கோபிநாத் என்பவர் தன் தாய் மங்கையர்கரசி உடன் புதுச்சேரி மாவட்டம் தேங்காய்த்திட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார். தன் தாயிடம் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, மங்கையர்க்கரசியின் மனையை தன் பெயருக்கு மாற்றி விட்டு 8 லட்சத்திற்கு விற்றுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டதும் கோபிநாத் முழுமையாக மாறி தாயை அடிப்பதும், துன்புறுத்துவதுமாக இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டிலிருந்து அவரை அடித்து வெளியே விரட்டி உள்ளார்.
இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த மங்கையர்க்கரசி போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது கோபிநாத் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அங்குள்ள காவல்துறையினர் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த மங்கையர்க்கரசி சாலையோரங்களில் வசித்து வருகிறார். அவர் கொடுத்த புகாரில் வீடு விற்ற பணத்தை வாங்கித் தந்தால்தான் வாடகைக்கு ஒரு வீடு வாங்கி தான் அதில் குடியேற முடியும் என அழுது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மேலதிகாரியிடம் தான் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.