Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கு விரட்டிவிரட்டி அடி…! வாகனத்துக்கு தீ வைப்பு… வங்கத்தில் வம்பிழுத்த பாஜகவினர் ..!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் கட்சி தமைலையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. மாநில முதல்வராக அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கின்றார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட மேற்குவங்க அரசியல் நிலைமை தற்போது  தலைகீழாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி அசுரமத்தனமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு எதிரான போராட்டங்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது.

நேற்றைய தினம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை பாரதி ஜனதா கட்சி நடத்தியது. போராட்டத்திற்கு ஏராளமான பாஜக தொண்டர்கள்  போராட்ட களத்திற்கு வருவதை உணர்ந்த அம்மாநில காவல்துறை போராட்டகாரர்களை ரயில் நிலையத்திலும், போலீஸ் நிலையத்திலும் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்தனர்.

ஆனாலும் போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகம் நோக்கிய கட்சி பேரணியில் கலந்து கொள்வதில் விடாப்பிடியாக இருந்து அனைவரும் தலைமைச் செயலகம் நோக்கிய பாஜக கட்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பேரணி தொடங்கி சென்ற நிலையில், போராட்டக்காரர்களுக்கும் – காவல்துறைக்கு தள்ளுமுள்ளு என தொடக்கி, காவல்துறை தண்ணீரை பீச்சியடித்து,  தடியடி நடத்தியும் விரட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல் பெரிய அளவில் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் பாஜக தொண்டர்களால் காவல்துறையினர் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டனர். காவல்துறை வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்கள் வைரலாகி பெரும் அதிர்ச்சியும், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் போராட்டம் செய்ய வேண்டியது தான், ஆனால் இந்த மாதிரியான வன்முறை போராட்டம் இருக்கக் கூடாது என்றும்,  பாரதி ஜனதா கட்சி வன்முறை அரசியலை கையிலெடுத்து  வருவது கண்டிக்கதக்கது என அம்மாநில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |