மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருக்கும் மற்ற கொள்ளையர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களிடம் ஒரு விசித்திர பழக்கம் இருந்துள்ளது.
அதாவது இவர்கள் திருடுவதற்காக செல்லும்போது செருப்பை கழட்டி கைகளில் வைத்து கொண்டு செல்வார்களாம். ஏனெனில் செருப்பை கழட்டி விட்டால் போலீசாரிடம் பிடிப்பட மாட்டோம் என்ற மூடநம்பிக்கை அவர்களிடம் இருந்துள்ளது. அதோடு செருப்பு போடாமல் நடந்தால் பொதுமக்கள் மற்றும் நாய்களுக்கு சத்தம் கேட்காது என்பதாலும் சிறப்புகளை கழட்டி கைகளில் வைத்துக் கொண்டு நடந்துள்ளனர்..