தென்ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடாமல் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட்ட பின்பும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதாவது விஞ்ஞானிகள் அவர்களுடைய உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு டெல்டா வைரஸையும், ஒமிக்ரான் வைரஸையும் எதிர்க்கும் சக்தி அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உருவாகி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே டெல்டா வைரஸை கட்டுப்படுத்தும் வல்லமை ஒமிக்ரானுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.