Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“முள்படுக்கையில் படுத்து” பக்தர்களுக்கு ஆசி வழங்கிய சாமியார்…. ஆச்சர்ய சம்பவம்…!!

சாமியார் ஒருவர் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.  இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி, 18ல் முள்படுக்கை தவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவின் போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகரை வழிபட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். பின் புண்ணிய தீர்த்தம் தெளித்து, நான்கு அடி உயரமுள்ள முள்படுக்கையில் சாமி ஆடியுள்ளார். இதையடுத்து முள்படுக்கையில் படுத்த கிடந்தபடி ஒரு மணிநேரம் தவம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார். சாமியாரின் இந்த செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Categories

Tech |