ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் “ஒமிக்ரான்” வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மரணத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உண்மையான பாதுகாப்பை வழங்கக் கூடியது தடுப்பூசி மட்டுமே. எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல் தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்கள் அடுத்து “பூஸ்டர்” டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கிடையே புள்ளிவிவரங்களின்படி அமெரிக்க நாடு கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதாவது அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,150 பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.