பிரேசில் நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் பேரணியில் ஈடுபட்ட அதிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதுவரை ஒரு கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சுகாதார நெருக்கடிக்கு அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனரோவின் அலட்சியமே காரணம் என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சலுடன் ஒப்பிட்டு ஆரம்பத்திலிருந்தே ஜெயீர் போல்சனரோ அலட்சியமாக பேசி வருவதும், முக கவசம் அணிவது, ஊரடங்கை அமல்படுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடித்து உள்ளிட்டவை தேவை அற்ற ஒன்று என்றும் அவர் கூறி வருவது தான் இந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் அதிபர் ஜெயீர் போல்சனரோ, சா பவுலா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் முககவசம் அணியாமல் வாகன பேரணி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து முக கவசம் அணியாமல் சா பவுலா மாகாணத்தில் அதிக அளவில் ஆட்களை திரட்டி கொண்டு கொரோனா விதிமுறைகளை மீறி அதிபர் ஜெயீர் போல்சனரோ பேரணியில் ஈடுபட்டதற்காக அவருக்கு 100 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பின் படி ரூ. 7,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.