Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை…காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு..!!

காஞ்சிபுரம்  அத்திவரதரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று  வழிபட இருப்பதையடுத்து கோவிலை சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் அத்திவரதரை காண வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 11,20,000 பேர் அத்திவரதரை வழிபட்டு சென்றுள்ளதாக  புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் அத்திவரதரை  தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வருகை தர இருக்கிறார். இதனை  முன்னிட்டு கோவிலைச் சுற்றி 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

முன்னதாகவே 2,500 காவல்துறையினர்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  நிலையில், கூடுதலாக 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்ய உள்ளதால், இன்று பிற்பகல் 2 மணிக்கு  தொடங்கி 5 மணி வரை மட்டுமே  பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனங்களுக்கு அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.மேலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி காஞ்சப்புரத்தில் அதிகாரிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

Categories

Tech |