Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விலைய ஏத்திட்டீங்களா? ”பரவாயில்லை கொடுங்க” ஆவலோடு குவியும் குடிமகன்கள்…!!

தமிழகத்தில் மதுக்கடைகளில் மதுபிரியர்கள் அதிகளவில் கூட்டமாக கூடி மது வாங்கி செல்கின்றனர்.

தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மது பிரியர்கள் குவிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. 7ஆம் தேதி காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகள் நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றது. ஆதார் அட்டையுடன் டாஸ்மாக் கடை முன்பாக மதுப் பிரியர்கள் குவிந்திருக்கின்றன.

இதில் டாஸ்மாக்கில் குவாட்டர் விலை 20 வரை உயர்ந்துள்ளது மது பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சாதாரண வகை 150 மில்லி மதுபாட்டிலில் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதே போல நடுத்தர ப்ரீமியம் வகை 180 மில்லி மதுபாட்டிலில் அதிகபட்ச சில்லரை விலையாக ரூபாய் 20 வரை உயர்ந்துள்ளது மதுபிரியர்களை வேதனையடைய வைத்தாலும் மதுபிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மது வாங்கிச் செல்கின்றனர்.

Categories

Tech |