தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 112 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்
கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ264 ரூபாய் உயர்ந்தது. மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ112 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 264உயர்ந்து 29,816க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ14 உயர்ந்து ரூ 3727_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ30,000 த்தை எட்டியுள்ளது.