ஈரோடு தளவாடி பகுதியை அடுத்த மலைப்பகுதியில் வாழைகளுக்கு நடுவே ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட வெங்காயத்தை விவசாயிகள் அறுவடை செய்து உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவு குறைந்ததால் ஏற்கனவே பயரிட்ட வாழைகளுக்கு நடுவே ஊடுபயிராக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது வெங்காயம் விளைச்சல் ஆகிவிட்டதால் அதை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதையடுத்து தாளவாடி பகுதியில் மொத்த வியாபாரிகள் கிலோவுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை விலை பேசி வெங்காய மூட்டைகளை வாங்கி செல்கின்றனர்.