பிக் பஜார் நிறுவனத்தின் 50 விழுக்காடு தள்ளுபடி விற்பனை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பிக்பஜார் சில்லரை விற்பனையகத்தில் வருடாந்திர சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இம்மாதம் 22ம் தேதியில் இருந்து 26ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் ஆடைகளுக்கான விலையில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதேபோல வீட்டு உபயோகப் பொருட்கள், மின் சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் 50 முதல் 60 விழுக்காடு விலையில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுகின்றன.. இந்த தள்ளுபடி விற்பனை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.