Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது – முதல்வர் பழனிசாமி!

அம்மா உணவகங்களில் தினமும் 7 லட்சம் ஏழை மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தாக்கம் முதலில் குறைவாகவும், பின்னர் அதிகரித்தும் மீண்டும் குறைகிறது. அரசு அறிவிக்கும் விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமாகவே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். மக்களுக்கு தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது.

வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன. அனைத்து துறை அதிகாரிகளும் துணை நிற்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றன. அம்மா உணவகம் மூலம் தினமும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலை இல்லா உணவு வழங்கப்படுகிறது என்றும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உரிய விதிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |